உள்நாடு

கற்பிட்டி அஹதிய்யாவில் இறுதிச் சான்றிதழ் பரீட்சையிக்கு தோற்றிய சகல மாணவர்களும் சித்தியடைந்து சாதனை

கற்பிட்டி அல் அக்ஸா அஹதிய்யா பாடசாலையில் இருந்து இம்முறை இடம்பெற்ற 2023/2024 ஆண்டிற்கான இஸ்லாம் அஹதிய்யா (தஹம்) பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சையிக்கு தோற்றிய சகல மாணவர்களும் சித்தியடைந்து 100 வீத சித்தியினை பெற்று சாதனை படைத்துள்ளதாக கற்பிட்டி அல் அக்ஸா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் எம்.ஐ சித்தி நிஹாரா தெரிவித்தார்.

மேலும் பரீட்சைக்கு தோற்றிய றியால்தீன் பாத்திமா றிஸ்னா , சுவைர்தீன் பாத்திமா சம்ஹா, நெய்னா மரைக்கார் பாத்திமா சபா, ஹூமாயூன் பாத்திமா நுஹா ஆகிய நான்கு மாணவிகள் நான்கு பாடங்களிலும் அதி திறமை சித்திகளான 04 டீ சித்திகளை பெற்றுள்ளதுடன். நிபாஸ் பாத்திமா நதீரா 3 டீ 1 சீ யையும், அபூதாஹீர் மொஹமட் ஆசீப் , பௌசிக் அஹ்னா பாத்திமா நசீர் பாத்திமா அம்னா ஆகிய மூவரும் 2 டீ. 2 சீ சித்திகளையும் , மபாஸ் பாத்திமா ஹமா 2 டீ. 1 சீ. 1 எஸ் சித்தியையும், அப்துல் முனாப் பாத்திமா றிப்ஹத் 3 சீ. 1 எஸ் சித்திகளையும் பெற்று
மொத்தமாக பரீட்சைக்கு தோற்றியவர்கள் 10 பேரும் 100 வீத சித்நி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *