உள்நாடு

30 வருடங்களின் பின்னர் கண்டி ஹேவாஹெட்டையிலிருந்து எம்.பி ஒருவர் தெரிவு..!

கண்டி மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலிருந்து 30 வருடங்களின் பின்னர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

கண்டி கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஜகத் மனுவர்ண என்பவரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வென்றவராவார்.
நீண்ட இடைவெளியின் பின்னர் இப்பிரதேச மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப இங்கிருந்தே ஒரு பிரதிநிதி தெரிவாகி இருப்பது குறித்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தெல்தோட்டை பிரதேச மக்களின் அடிப்படை வசதி வாய்புகளை மேம்படுத்த அரபு நாடுகளுடன் தொடர்பு கொண்டு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் கலாநிதி அஷ்ஷெய்க் முனீர் சாதிக் நேற்று இவரது இல்லத்துக்கு சென்று சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் சமூக நலப் பங்களிப்புக்கு தோழமையுடன் பங்களிப்பாற்றுவது பற்றியும் கலந்துரையானார்.

( ரஷீத் எம்.றியாழ் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *