திவுல்வெவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி..!
மதவாச்சி பொலிஸ் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மதவாச்சி திவுல்வெவ பகுதியில் வயலில் உளவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்குள்ளாகி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி குளிக்கட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.லக்மால் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
வயலில் உளவு வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கூதலுக்குள்ளாகி பலத்த காயத்திற்கு உள்ளான நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)