உள்நாடு

விருப்பு வாக்கில் சாதனை படைத்த விஜித ஹேரத்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை தேர்தல் வரலாற்றில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 716,715 வாக்குகளைப் பெற்றே அவர் இவ்வாறு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.

பிரதமர் ஹரிணி தான்.எந்த மாற்றவும் இல்லை.பத்திரிகை மாநாட்டில் ரில்வின் சில்வா. புதிய அரசாங்கத்தில் ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார்.அதில் எந்த மாற்றமும் கிடையாது.ஏனைய கட்சிகளைப் போல் தீர்மானங்களை அடிக்கடி மாற்றும் போக்கு எம்மிடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *