உள்நாடு

டிசம்பர் 14 ல் சிவனொளிபாத மலை யாத்திரைக் காலம் ஆரம்பம்

சிவனொளி பாத மலை யாத்திரைக் காலம் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த யாத்திரைக் காலத்தை முன்னிட்டு வெளியிடங்களிலிருந்து சிவனொளி பாதமலையைத் தரிசிக்க வருவோரின் வசதி கருதிஎதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை புகையிரத திணைக்களமும் இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது .
ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லதண்ணி புகையிரத நிலையம் வரைக்குமான விசேட போக்குவரத்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிவனொளி பாதமலை யாத்திரைக் காலத்தை முன்னிட்டு ஹட்டன் நல்ல தண்ணி பிரதேசத்தில் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

சுற்றாடலைப் பாதுகாக்கும் வேலை திட்டத்தின் கீழ் சிவனொளி மாதம் மலையை தரிசிக்க வருவோர் பிளாஸ்டிக் போதல்களை எடுத்து வருவதை முற்றாகத் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் போதைப் பொருட்களை கொண்டு வருவதை கண்காணிக்கும் வகையில் மோப்ப நாய்களை பயன்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *