கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்க ஏற்பாட்டில் வாசிப்பு மாத நிகழ்வுகள்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வாசிப்பு மாத நிகழ்வுகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை வத்தளை நகர சபை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். மொஹிதீன் தலைமையில் நடை பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வுக்கு பிரபல சமூக சேவையாளரும் ஜேஜே. நிருவணத்தின் உரிமையாளர் அல் ஹாஜ் டாக்டர் ஹனீப் அவர்கள் பிரதம அதிதியாகவும் பிரபல தொழிலதிபர் ஸீனத் டிரேடிங் கம்பெனி உரிமையாளர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் முஸம்மில் ஜாஜி தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாடசாலை கல்வியறிவு சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை யும் கருத்தரங்குகளை யும் நடத்தி வருவதுடன் வத்தளை களனி மஹர சிங்கள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் கட்டுரைஇ பேச்சுப் போட்டிகளையும் நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் வாசிப்பு மாதத்தை யோட்டி நடத்தப் பட்ட நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவுக்கு மேற்படி பிரமுகர்களுடன் மேலும் பலர் விசேஷ அதிதிகலாக கலந்து கொள்ள உள்ளனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)