உள்நாடு

பலலுவெவ கட்டுமதகு கால்வாயில் முஸ்லிம் நபரின் சடலம் மீட்பு.

கல்கிரியாகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட பலலுவெவ கட்டு மதகு கால்வாயில் மனித சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பலாகல பலலுவெவ யைச்  சேர்ந்த ஹனிபா மொஹம்மது சதகது லெப்பை என்ற 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது பலலுவெவ கட்டு மதகு கால்வாயில் நீரில் மூழ்கியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் (03) மாலை அந்த இடத்திற்கு குளிப்பதற்கு வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிப்பதுடன் .அந்த இடத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் அவருடையது என சந்தேகிக்கப்படும் சில ஆடைகளும் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திடீர் மரண பரிசோதகர் பொலிசாருக்கு வழங்கிய ஆலோசனைப்படி சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ள மாவட்ட நீதிமன்ற வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *