உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் மரணம்
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து பலாகல நானவத்தேகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விறகுகளை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த நேகம சிறிசுமன வித்தியாலயத்தில் தரம் 09 ல் கல்வி பயின்று வரும் டப்ளியூ .ஏ.ஏஷான் வீரசிங்க என்ற 14 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)