உள்நாடு

அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்து ஆராய 10 பேரடங்கிய விஷேட குழு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை இழந்த சமுர்த்தி பயனாளர்கள் குறித்து ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்க இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *