70 வீதமான வாக்காளர் அட்டைகள் இதுவரை வினியோகம்.தபால் மா அதிபர்
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களுக்கான வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் விரைவாக இடம் பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டைகள்கள் நாளை மறுதினம் 7ஆம் திகதியுடன் நிறைவடைய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 17.1 மில்லியன் உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து தபால் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 11.4 மில்லியன் அட்டைகள் அதாவது 70 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் விநியோகப்பணிகள் இடம் பெறுவதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையால் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் அனைத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் விநியோகிக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யு. எம்.ஆர். சத்குமார தெரிவித்துள்ளர்.
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்போது அதனை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அலுவலகங்களில் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
07 திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை தபாலகங்களில் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால் மாஅதிபர் தெரிவித்தார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)