வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசவாசிகளுக்கு குருநாகல் முஸ்லிம்களின் உதவி
கொலன்னாவ வெல்லம்பிடிய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு ரூபா 25 இலட்சம் பெறுமதியான நிதி உதவி வழங்கி வைப்பு
குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கம் , குருநாகல் பசார் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் குருநாகல் மலே ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து கொலன்னாவ வெல்லம்பிடிய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கும் வைபவம் கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசலில் குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். வை. எம். கியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
150 வறிய குடும்பங்களுக்கு தலா 15000 ரூபா விகிதம் இந்நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)