ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் பேருவளை பிரதேசத்தில் பிரசார பணிகளில்
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் இப்திகார் ஜெமீல்,அஸ்லம் ஹாஜியார்,சட்டத்தரணி மகேஷ்கான்சன ஆகியோருக்கு பொதுத்தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பேருவளை சினன்கோட்டை பெருகமலை,ஹேன மற்றும் எகொடவத்த ஆகிய பகுதிகளில் பிரசாரப் பணி 27ஆம் திகதி (27-10-2024) தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
வீடு வீடாகச் சென்று உலமாக்கள்,ஏனைய மதகுருமார்கள்,புத்திஜீவிகள்,அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்,இரத்தினக்கல் வர்த்தகர்கள்,மீனவர்கள்,விவசாயிகள் ஏனைய துறைகளில் ஈடுபடுவோரை சந்தித்து ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் இருவருக்கும் ஆதரவை பெற்றுத்தரும்படி வேண்டிக் கொண்டனர்.
மேற்படு மூன்று கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பணி மிகவும் வெற்றியளித்ததாக ஏற்பட்டார்கள் தெரிவித்தனர். பெருகமலை சந்தியிலிருந்து ஆதரவாளர்கள் தமது பிரசாரப் பணியை ஆரம்பித்தனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)