அல் குர் ஆனை முழுமையான மனம் செய்த சிறுவன் முக்பில் சினானுக்கு ஊர் தழுவிய ரீதியில் கெளரவிப்பு
செவிப்புலன்களின் உதவியுடன் மாத்திரம் 12 வயதில் அல் குர் ஆனை முழுமையாக கேட்டு மனம் செய்து அல் ஹாபிழாக சாதனை படைத்த கண் பார்வையை இழந்த சிறுவன் எம்.முக்பில் சினானை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (01) ஜும் ஆ தொழுகையை தொடர்ந்து புதிய காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும் ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மேனத்தின் உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மற்றும் பெருந்திரளான ஊர்மக்கள் கலந்துகொண்டு அச்சிறுவனை பாராட்டி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
(எம்.பஹத் ஜுனைட்- காத்தான்குடி செய்தியாளர்)