நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவு
நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (31.10.2024) இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் பாரிய இரத்த தட்டுப்பாடு காரணமாக, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு அவசர இரத்தத்தேவையை பூர்த்தி செய்வதற்காக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு இரத்த தானத்தில் ஈடுபட்டு, தமது சமூகப் பொறுப்புணர்வினை வெளிப்படுத்தினர். இம் முகாமில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முகாமின் மூலம் அதிகளவான இரத்தப்பை கோரிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன், சமூகத்தின் பக்கபலமும் உறுதியாக வலியுறுத்தப்பட்டது என நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
(நிந்தவூர் நிருபர்)