ரவி,ஷானி இருவரையும் பதவி நீக்க மாட்டோம்; விஜித ஹேரத் உறுதி
உதய கம்மன்பிலவின் கூற்றுக்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை பதவி நீக்க மாட்டோம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியாகத் தெரிவித்தார்.
உதய கம்மன்பிலவின் குறுகிய நோக்கங்களுக்கு எம்மால் அடிபணிய முடியாது.இந்த விடயத்தில் நாம் உறுதியாக தெளிவாக இருக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க சாகல ரத்னாயக ஆகியோரே தமது சொந்த நலன்களுக்காகவே ஏ.என்.ஜே .தி அல்விஸ் அறிக்கையை தயார்படுத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.