வியாழன் முதல் சனி வரை கம்பஹா, கொழும்பில் டெங்கு ஒழிப்பு திட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக செய்த கடும் மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதால் கொழும்பு கம்பஹாவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் படி எதிர்வரும் 24,25,26 ஆகிய தினங்களில் இரு மாவட்டங்களையும் சேர்ந்த 22 சுகாதார பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.