தெல்தொட்டையில் இலவச கண் சத்திர சிகிச்சை
கண்டி மாவட்டத்தில் நீண்டகாலமாக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் தெல்தோட்டை சல்மியா நலன்புரிச் சங்கம் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான
இலவச கண் பரிசோதனைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆந் திகதி தெல்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த கண் பரிசோதனைகளில் பங்கு பற்ற விரும்புவோர் சல்மியா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். கன்சூல் கரீமுடன் (தொலைபேசி இல.0779566678) தொடர் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)