வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு பாகிஸ்தானால் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கொழும்பிலுள்ள அண்டை நட்பு நாடான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராலயத்தினால் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் கொட்டிகாவத்தை பிரதேச செயலக வளாகத்தை மைய்ய படுத்தி மெகொட கொலன்னாவ நூரானியா மஸ்ஜிதில் பள்ளி தர்மகார்தா சபையின்ர் முன்பால் இடம்பெற்றது.
முஸ்லிம் முற்போக்கு ச்கதியின் மத்தியகுழு உறுப்பினர்களான மிஃலால் மௌலவி, முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான கலீலுர் ரஹ்மான், முஸம்மில், காதர் ஆகியோர் பாகிஸ்தான் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆற்றிய இந்த அறப்பணியானது பிரதேசத்தின் அனைத்து மதத்தினருக்கும் மனிதாபிமான ரீதியில் “என்ரும் இலங்கை உணர்வுடன் எழுன்து நிற்போம்” என்பதன் அர்த்தத்தை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.