இன்றைய சூழ்நிலையில் எங்களுக்கிடையே பிரிவினைவாத அரசியல் தேவையில்லை..! -குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம். கே. எம். அஸ்லம் தெரிவிப்பு
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் சிங்கள அரசியல், தமிழ் அரசியல் என்று எங்களுக்கிடையே பிரிவினைவாத அரசியல் தேவையில்லை. இந்த நாடு பிரிவினைவாத அரசியலால் வேறுபட்ட அரசியலால் 76 வருடங்கள் குட்டிச் சுவராக்கப்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். எனவே இந்த இடத்தில் ஒரு முஸ்லிமாக இருக்கலாம். ஒரு சிங்கள சகோதரர்களாக இருக்கலாம். தமிழ் சகோதரர்களாக இருக்கலாம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கியமான பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய கால சூழ்நிலை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டிகின்றது.
எனவே நாங்கள் ஒரு முஸ்லிமாக தமிழனாக. சிங்களவனாக இந்த நாட்டின் பாதுகாப்பையும் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு நாங்கள் இன மத பேதமின்றி தேசிய மக்கள் சக்தியின் வேலைத் திட்டத்துடன் நாங்களும் இணைந்து கொள்வோம். அவ்வாறு இணையும் போதுதான் ஒரு அழகான நாட்டையும் எமக்கு உகந்த அழகான சூழலை உருவாக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)