விளையாட்டு

6ஆவது கரம் உலகக்கிண்ண இலங்கை அணியின் அனுசரனையாளராக இலங்கை கிரிக்கெட்

அடுத்த மாதம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கரம் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை தேசிய கரம் அணியினர் இன்று (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆறாவது கரம் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணி முகாமையாளருடன் எட்டு விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்திற்கான முழுமையான அனுசரனையை இலங்கை கிரிக்கட் பொறுப்பேற்றுள்ளதுடன் அதற்காக 5 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. அதற்கமைய இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர் திரு.சுஜீவ கொடலியத்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிதியுதவியினை வழங்கி தை;திருந்தார்.

மேலும் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து திரு. ரணில் அபேசிங்க அணி முகாமையாளராகவும், ஆண் வீரர்களான மொஹமட் ஷஹீட், அனஸ் அஹமட், கவீன் நிம்னெத் பீரிஸ், தினேஷ் நிஷாந்த பெர்னாண்டோ, ஆகியோருடன் பெண் வீராங்கனைகளான ஜோசப் ரோஷித வடுகே, ஹிருஷி மல்ஷானி பீரிஸ், தருஷி ஹிமஹன்சிகா வீரசேகர மற்றும் தஸ்மிலா கவிந்தி ஆகியோரும் இவ் உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கின்றனர்.

அத்துடன் இலங்கை கரம் அணியுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்ட பிரதமர், வீரர்களின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *