உள்நாடு

பாடசாலையின் பெயரில் கெஹெலியவின் பெயர் நீக்கம்..!

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அனுமதி வழங்கியுள்ளார்.

இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்பப் பாடசாலை என பெயர் மாற்றவும் மாகாணக் கல்வித் திணைக்களம் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கும் ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பாடசாலை சார்ந்த அமைப்புக்கள் முன்மொழிவுகளை முன்வைத்திருந்த குறிப்பிடத்தக்கது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *