அம்புலுவாவ கேபிள் கார் திட்டப் பணிகளில் தலையிடுவதை தடுக்க நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு.
கம்பளை அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டப் பணிகளில் தலையிடுவதையோ அல்லது குறுக்கிடுவதையோ தடுக்குமாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என தெரிவித்து தனியார் நிறுவனமொன்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கம்பளை அம்புலுவாவா உச்சி மலைப்பகுதியிலிருந்து கம்பளை நகருக்கு இணைக்கப்படவுள்ள இந்த கேபிள் கார் திட்டம் இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகும்.
(ரஷீத் எம். றியாழ்)