உள்நாடு

அரசியலிலிருந்து ஒதுங்க கெஹெலிய தீர்மானம்

அரசியலில் இருந்து சிறிது காலம் தான் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய நண்பர்கள் குழுவை கண்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சந்தித்த போதே தனது இத்தீர்மானத்தை அறிவித்தார்.

இந்த ஹோட்டலில் இவரால் விசேட மதிய விருந்துபசாரமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துபசாரத்தின் பின்னரே இத்தீர்மாத்தை அறிவித்தார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பில் முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *