உள்நாடு

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கண்டிக்கு விஜயம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று(15) கண்டிக்கு விஜயம் செய்தார்.

கண்டியில் அஸ்கிரிய ,மல்வத்த தேரர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தேர்தல் பிரசார நடவடிக்கை குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ,கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரிஎல்ல உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் இங்கு கலந்து கொண்டனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *