உள்நாடு

View அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான செயலமர்வு

இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான View அமைப்பின் பிராந்திய கண்காணிப்பு குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் கண்காணிப்பு தொடர்பான அறிவூட்டும் செயலமர்வு 2024.10.16 ம் திகதி அட்டாளைச்சேனை பல்நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் View அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சாஹிரா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இதில் உங்களுடைய வாக்கு நாட்டின் எதிர்காலமாகும் எனும் தொனிப் பொருளில் view அமைப்பின் பணிப்பாளரும் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெளிவுரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் வொய்ஸ் ஒப் ரைட் (Voice of Right) அமைப்பின் பணிப்பாளர் அருள் நாயகம் தர்ஷிக்காவும் கலந்து கொண்டார்.

(ஒலுவில் விசேட செய்தியாளர், திராய்க்கேணி செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *