சர்வதேச சிறுவர் தினப் போட்டியில் ஐந்து வெற்றியாளர்கள்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பலகத்துறை கலை இலக்கிய வட்டம் நடத்திய சிறுவர்களது ஆளுமைகளுக்கு களம் அமைக்கும் கலைப் போட்டியில் 5 சிறுவர்கள் வெற்றியாளர்களாக (09. 10. 2024) அறிவிக்கப்பட்டனர்.
இரண்டு நிமிடங்களுக்கான வீடியோ பதிவில் அடங்கக் கூடியதாக கவிதை,பாடல், ஓரங்க நாடகம் மற்றும் கதை என்பன சிறுவர்களிடமிருந்து போட்டிக்காக வரவேற்கப்பட்டன.
12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் 76 சிறுவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியதாக பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் எம்.ரி.எம் சைலாஸ் தெரிவித்தார்.
போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர் ஐவருக்கும் நீர் கொழும்பு கொப்பரா சந்தியில் இயங்கும் ‘கெஷுவல் லுக்’ (Casual look,)ஆடையகம் பரிசுகளை வழங்க முன் வந்துள்ளது.
சிறுவர்களின் அபாரத் திறமை கண்டு தாம் வியப்படைவதாகவும் அவர்களுக்குரிய பரிசுகள் விரைவிலே வழங்கப்படும் என்றும் ‘கெஷுவல் லுக்’ உரிமையாளர் எம் எம் ரிஸ்வான் தெரிவித்தார்.
பரிசுகள் பெறுபவரின் விபரங்கள் வருமாறு;
முதலாம் பரிசு-
எம். எம். ஆஸியா, தரம் 06
அல்பலாஹ் கல்லூரி.
இரண்டாவது பரிசு-
எம். எஸ். நுஹா, தரம் 06
அல்பலாஹ் கல்லூரி.
மூன்றாவது பரிசு-
அப்ரின் ஹனா, தரம் இரண்டு அல்பலாஹ் கல்லூரி.
நான்காவது பரிசு-
பாத்திமா சப்fரா, தரம் 6
அல்ஹிலால் தேசியகல்லூரி
நீர் கொழும்பு.
ஐந்தாவது பரிசு-
எம்.ஆர். தானியா,
தரம் ஒன்று
அல்பலாஹ் கல்லூரி.
(எம்.ஜே.எம். தாஜுதீன்)