உள்நாடு

உலமா சபை புத்தளம் நகரக் கிளையின் மாதாந்த கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் மாதாந்த கலந்துரையாடல்  08.09.2024 ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் காரியாலயத்தில் நடைப்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களை சந்தித்து பேசுவதற்காக ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு சமூக சேவையாளர் ஹிஷாம் ஹுஸைன் 9 மணிக்கு வருகை தந்தார்.

அதனை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் இளைஞர் அமைப்பு பொறுப்புதாரிகள் 9.20 மணிக்கு வருகை தந்தனர்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் இன்பாஸ் அவர்கள் 9.35 மணிக்கு வருகை தந்தார்.

இவர்கள் அனைவரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்கள் காரியாலயத்திற்கு அன்பாக வரவேற்றனர்.

 

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *