உள்நாடு

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 இல் தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா..!

அல் ஹசீனா பிறைடில் அகடமி ஏற்பாட்டில் இந்திய திரைப்பட நடிகை மீனா சாஹர் கலந்து கொண்ட குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா-2024 கடந்த 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த அழகுக்கலை நிபுணர் மற்றும் சரும பராமரிப்பாளருக்கான தேசிய விருதினை எம்.என்.பாத்திமா நப்ரா (FOUNDER OF HM UNIQUE CREATIVE) பெற்றுக் கொண்டார்.

மேலும் இவ்விழாவில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர் ,சமுக சேவையாளர்கள், சாதனையாளர்கள் என பலருக்கு நடிகை மீனா சாஹர் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *