உள்நாடு

வெளியுறவு துறை அமைச்சர்  அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் காலமானார்..! பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி ஆகியோர் இரங்கல்..!

இலங்கை வெளியுறவு துறை மற்றும் நீதி துறை அமைச்சர்  அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இலங்கை வெளியுறவு துறை மற்றும் நீதி துறை அமைச்சர்  அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் மரணமுற்ற செய்தியை கேட்டு மிகவும் துக்கமும் துயரமும் அடைந்தேன்.
அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் மறைவு பேரிழப்புக்கு அல்லாவுடைய பெரும் கருணையால் மீள் வளத்துக்கும் அல்லாவிடம் பிராத்திப்போம். அவருடைய பிளைகளை பொறுத்தி கொண்டு ஜன்னத்தூல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவருக்கு வழங்குவனாக அவரின் மறைவால் வாடும் அவரது மக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
ஜம்ரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்குவதற்கு  இறைஞ்சிவோம்.எனது சார்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு துறை அமைச்சர் அலி சப்ரி தயார் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனர் சிராஜூதீன், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *