விளையாட்டு

இலங்கை எதிர் கம்போடிய அணிகள் மோதும் 2ஆவது போட்டி இன்று

ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இன்றைய தினம் (10) பிற்பகல் 5.30 மணிக்கு இலங்கை அணி கம்போடியா அணியை கம்போடியாவின் ஒலிம்பிக் மைதானத்தில் சந்திக்கின்றது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ண உதைப்பந்தாட்டத் தகுதிகாண் போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய இலங்கை அணி கம்போடிய அணி|யுடன் தகுதிகாண் போட்டிகள் இரண்டில் பங்கேற்கின்றது.

அந்தகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி கடந்த 5ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற அப்போட்டியில் இரு அணிகளாலும் கோல்களைப் பெற முடியாமல் போக போட்டி கோல்கள் இன்றி சமநிலை பெற்றது.

அதற்கமைய இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆது லெக் ஆட்டம் இன்று (10) பிற்பகல் 5.30 மணிக்கு கம்போடியாவின் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கின்ற இலங்கை அணி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கம்போடியாவிற்கு பயணித்து தொடராக 3 நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *