உள்நாடு

மஹகொட சம்சுதீன் வித்தியாலயத்தில் ஷஹ்மி ஷஹீதுக்கு கெளரவம்..!

பேருவளை சாதனை வீரன் ஷஹ்மி ஷஹீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவமொன்று மஹகொடை ஐ.எல்.எம் ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

அதிபர் பாத்திமா சிஹானா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஷஹ்மி ஷஹீதின் தாயார், பேருவளை நகர சபை முன்னாள் உப தலைவர் ஹஸன் பாஸி, ஸிமி ஹோல்டிங் முகாமைத்துவ தலைவர் செய்ஹு யூஸுப் முஹம்மத் இஜ்லான், பிரதி அதிபர் பாத்திமா ரைஸா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மஹ்தி ஹஸன், பிரபல சமூக சேவையாளர் நபுஹான் சிஹாப்தீன் உட்பட பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பெருமளவிலானோர் பங்குபற்றினர்.

நாட்டை கரையோரமாக 1500 கிலோ மீற்றர் தூரத்தை 45 நாட்களில் சுற்றி சாதனை நிலைநாட்டிய ஷஹ்மி ஷஹீத் இப் பாடசாலையின் பழைய மாணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ. எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *