உள்நாடு

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தரும் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர்களினது நன்மை கருதி ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறுகிய கால பயிற்சிநெறிகளாக மிகவும் குறைந்த கட்டணத்தில் குறித்த துறைகளில் பல ஆண்டு அனுபவமுள்ள விரிவுரையாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்டவுள்ள குறித்த பயிற்சிநெறிகளில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பயிற்சிநெறி பற்றிய விபரங்கள் இத்துடன் இணைப்பட்டுள்ளன.

தகுதியுள்ளவர்கள் தாம் விரும்பும் பயிற்சிநெறியில் இணைந்து கொள்ள முடியுமென்பதுடன், இதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்ளக்கூடிய அரிய சந்தர்ப்பமாகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் பல இலட்சங்களைப் பெற்றுத்தரும் மிகவும் பயனுள்ள பயனுள்ள பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளுமாறு தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கும்.
தொலைபேசி இலக்கம் – 0775488854, email – [email protected]

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *