சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுனர் முஸம்மில்..!
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது மாக ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் தான் ஆளுனர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.