விளையாட்டு

இன்று தன் சொந்த மண்ணில் வைத்து கம்போடியாவை எதிர்கொள்ளும் இலங்கை

ஆசியக்கிண்ண உதைபந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இன்றைய தினம் (5) பிற்பகல் 3.30 மணிக்கு இலங்கை அணி கம்போடியா அணியை கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் எதிர்த்தாடுகின்றது.

ஆசியக் கிண்ண தொடருக்கான அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டித் தொடரின் ஒரு அங்கமாக இலங்கை உதைப்பந்தாட்ட அணி கம்போடிய உதைப்பந்தாட்ட அணியை இரு போட்டிகளில் எதிர்த்தாடுகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (5) பிற்பகல் 3.30 மணிக்கு முதல் போட்டி கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது. இதற்கான இலங்கை அணி சுஜான் பெரோரா தலைமையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கம்போடியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை கால்பந்து அணி கம்போடியாவை எதிர்கொள்வது எட்டு ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

இன்றைய போட்டியைக் காண பெருந்திரளான ரசிகர்கள் கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *