உள்நாடு

ரணில் – சஜித்தை இணைக்க முயற்சியா..? மறுக்கின்றார் முஜீபுர் ரஹ்மான் எம்.பி..!

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாடொன்று ஏற்படலாம்” எனத் தெரிவிக்கப்படுவதை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.
“சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாடு ஏற்படப்போகின்றது எனத் தெரிவிக்கின்றனர். இது உண்மைக்குப் புறம்பான விடயம், எங்கள் வேட்பாளர் முன்னணியில் உள்ளதால், அதற்கான தேவை எதுவும் இல்லை” என அவர் அடித்துக் கூறியுள்ளார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோற்றத்தைக் கூட மாற்றிக்கொள்ளவேண்டிய அளவிற்கு, சிலரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளார். அவர் விதம் விதமான சேர்ட்டுகளையும் அணிகின்றார்” எனவும் முஜீபுர் ரஹ்மான் குற்றம் சுமத்திப் பேசினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *