உள்நாடு

16வது வருடாந்த புனித மெளலிதுன் நபி ﷺ மஜ்லிஸ்

பேருவலை சீனன்கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரபீயுனில் அவ்வல் மாதம் 12 தினங்கள் வருடாந்தம் நடைபெறும் புனித ஹரீரி மெளலித், ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸ் எதிர்வரும் 04.09.2024 புதன் கிழமை பின்னேரம் வியாழன் இரவு இஷா தொழுகையை தொடர்ந்து அதிபர் மெளலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முய்யிதி)தலைமையில் ஆரம்பிக்கப்படும்.

இம் மஜ்லிஸ் தொடர்ந்து 11 தினங்கள் இஷா தொழுகையை தொடர்ந்து நடைபெற்று வந்து 15.09.2024 ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு வழமை போன்று பாஸியா பெரிய பள்ளிவாசலில் தமாம் மஜ்லிஸ் நடைபெறும் என சீனன்கோட்டை பள்ளிச்சங்க இனைச்செயலாலர் எம்.எம்.எம்சிஹாப் ஹாஜியார் தெரிவித்தார்.

(பேருவலை பீ.ம். முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *