லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
மாதாந்த விலை சூத்திரத்தின்படி செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கமைய ஜூலை மாதம் முதல் பெற்றுக்கொள்ளும் விலைக்கே இந்த மாதத்திலும் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளலாம்.