உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஹோமியோபதி வைத்தியசாலை இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்று 31.08.2024 மிக விமர்சையாக நடைப்பெற்று முடிந்தன.

1. நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம்
2. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தாமதமாதல்
3. அன்றாடம் ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலி
4. உடல் பருமன்
5. முடி உதிர்தல்
6. பேண்களை அழித்தல்
7. பாடசாலை மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றல்
8. பித்தப்பை, சிறுநீரகக் கல் அகற்றல்
9. வயிறு சம்பந்தமான நோய்கள்
10. ஆண் பெண் மலட்டுத்தன்மை

இம்முகாமில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

வைத்தியர்: எ.எச்.எம். இஸ்ரத் பர்வின்
அவர்களால் காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் ஆண்கள் பெண்கள் வருகை தந்து பிரயோசனம் பெற்றனர்.

இலவசமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பொறுப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்
அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ) செயல்பட்டார்.

இத்தருணத்தில் புத்தளம் நகர சபை செயளாலர் அவர்களுக்கும் அதேபோன்று ஹோமியோபதி வைத்தியசாலை வைத்தியர் அவர்களுக்கும் ஜமிய்யா மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம்
நகரக் கிளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *