ஒலுவில் சஹ்வா மகளிர் அரபிக் கல்லூரி 2023/2024 க.பொ.த உயர் தர பரிட்சைப் பெறுபேற்றில் முன்னணியில்
இம்முறை நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒலுவில் சஹ்வா மகளிர் அரபிக் கல்லூரி மாணவிகள் கலைத் துறையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர் அந்த வகையில் பரிட்சைக்கு தோற்றிய 23 மாணவிகளும் சித்தி பெற்றுள்ளதுடன் 19 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இம் மாணவிகளுக்கும் , அவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர் அஷ்ஷேஹ் A.L.ஜலால்தீன் , ஆலோசனை மற்றும் நெறிப்படுத்தலை வழங்கிய I.L.இஸ்ஸதீன் SLPS அவர்களுக்கும், திறமையாக கற்பித்த ஆசான்களுக்கும் , பெற்றோர்களுக்கும் ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
(இஸட்.ஏ.றஹ்மான் – ஒலுவில் செய்தியாளர்.)
