உள்நாடு

ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை 2023/2024 க.பொ.த உயர் தர பரிட்சைப் பெறுபேற்றில் சாதனை..!

இம்முறை நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை )மாணவர்கள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் மருத்துவப் பிரிவுக்கு 03 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவுக்கு 10 மாணவர்களும்
பொறியியல் பிரிவுக்கு 03 மாணவர்களும் ,பெளதீக விஞ்ஞானப் பிரிவுக்கு 10 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். அத்துடன் முகாமைதத்துவ பீடத்திற்கு 06 மாணவர்களும் கலைத்துறைக்கு 10 மாணவர்களுமாக
மொத்தம் ஒலுவில் அல்- ஹம்றா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை 42 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இம் மாணவர்களுக்கும் , அவர்களுக்கு
பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலையின் அதிபர் அஷ்ஷேஹ் UK. அப்துர் ரஹீம் அவர்களுக்கும், திறமையாக கற்பித்த ஆசான்களுக்கும் , பெற்றோர்களுக்கும் ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

 

(ஒலுவில் செய்தியாளர் -இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *