கட்டுரை

உங்கள் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டுமா?…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.. அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுங்கள். அவை உங்கள் உடலை சீராய் வைப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியாய் வைக்க உதவும்.

நம் அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு மாற்றங்களை நாம் ஏற்படுத்தினால் அது நம்மை வெற்றிக்கான பாதைக்கு அழைத்து செல்லும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற….

உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்:

வேலை, குடும்பம் என்று பம்பரமாய் சுற்றிசுழலும் இந்த பரபரப்பான உலகில் தனக்கான மீ டைம் என்பதையே நம்மில் பலர் முற்றிலுமாக மறந்தே விட்டோம். உடல் ஆரோக்கியமும் அதில் அடங்கும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.. அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுங்கள். அவை உங்கள் உடலை சீராய் வைப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியாய் வைக்க உதவும்.

வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:

“ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி!” என்றார் ஜூலியஸ் சீசர். உலகில் தலை சிறந்த தலைவர்கள் அத்தனை பேரும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். புத்தக வாசிப்பிற்கு அப்படி ஒரு பவர் என்றே கூறலாம். ஒவ்வொரு புத்தாகவாசிப்பின் முடிவிலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு ஊன்று கோல் நிச்சயம் நமக்கு கிடைக்கும். அன்றாட வாழ்க்கையில் புத்தக வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்குங்கள்.

பயனுள்ள பொழுதுபோக்கில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்: உங்கள் மனதிற்கும், மூளைக்கும் ஓய்வும் புத்துணர்ச்சியும் மிகவும் அவசியம். ஒரு பயனுள்ள பொழுதுபோக்கில் உங்களை அன்றாட ஈடுபடுத்திக்கொள்ளுங்கள் . பெயின்டிங் செய்வது, வரைவது, போன்ற செயல்களில் ஈடுபடுவதால் உங்களுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.

எதிர்மறை எண்ணங்களை தவித்திடுங்கள்:

“எண்ணம் போல் வாழ்க்கை” என்பார்கள். நமது வாழ்க்கையின் நகர்வுகளுக்கும் நமது எண்ணத்திற்கும் பல வகையில் தொடர்புகள் உண்டு என பல ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதை நம்மில் பலர் கேட்டிருப்போம். நமது சிந்தனைகள், எண்ணங்கள் பல வகையில் நமது வாழ்க்கையுடன் தொடர்புடையது. எனவே நமது எண்ணங்கள் எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் வரும்போது அதை நாம் கடந்து வர வேண்டும்.

நமது எண்ணங்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நல்ல நண்பர்களோடு பழகுங்கள்: நம்மை சுற்றி எப்போது பாசிட்டிவான நபர்களை வைத்துக்கொள்வதே சிறந்ததது. நம் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாகவும், நமது வளர்ச்சியை கண்டு மனமார மகிழும் நல்ல நணபர்கள் இருந்தால் வாழ்க்கையில் பல தடைகளை சுலபமாக கடந்து விடலாம். அதனால் தான் நாம் யாருடன் பழகுகிறோம் , நாம் யாரை நெருக்கத்தில் வைக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவற்றை பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்போம்..!!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *