உள்நாடு

கல்ஹின்ன இளம் வைத்தியர் மரணம் : முறையாக சமைக்கப்படாத BBQ CHICKEN மரணத்திற்கு காரணம்..!

அண்மையில் மரணித்த கல்ஹின்ன இளம் வைத்தியர் Tariq Gaffoor க்கு வயது 34 மட்டுமே.

அவரும் அவரது மனைவியும் ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னையிலிருந்து திரும்பி கொழும்பு வந்தடைந்து அவரது மனைவியின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றனர்.

அன்று அவர்கள் இருவரும் இரவு உணவு உண்பதற்காக CHICKEN BURGER ஆர்டர் செய்திருந்தனர்.

திங்கட்கிழமை வேலைக்குச் சென்று வந்த குறித்த இளம் வைத்தியருக்கு அன்றைய இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. செவ்வாய் கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய சுகயீனம் அதிகரிக்கவே ICU UNIT இல் அனுமதிக்கப்படும் மோசமான நிலைக்குச் சென்றார்.

அவரது சகோதரி டாக்டர் ஷர்மிளா இது பற்றிக்கூறும் போது, இது சால்மோனெல்லா எனும் கிருமியின் தொற்று என்றும் செப்சிஸ் எனும் கொடிய தொற்றுநோயை ஏற்படுத்தியது என்று கூறினார்.

இந்த சால்மோனெல்லா என்ற பாக்டீரியா, இது கோழியின் இரத்தத்தில் உள்ளது. அவர்கள் இரவு சாப்பட்டிற்காக உண்ட BBQ சிக்கன் சரியாக சமைக்கப்படாததே இந்த குறித்த கிருமியின் தாக்கத்திற்கான காரணமாகும்.

எனவே, போதுமானளவு வேகாத நிலையில் முறையாக சமைக்கப்படாத BARBECUE CHICKEN BURGER தான் குறித்த வைத்தியரின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தயவு செய்து அனைவரும் FAST FOOD எனும் இவ்வாறான BURGER போன்ற உணவு வகைகளை முடிந்தளவு தவிர்ப்பதோடு ஆசைக்காக எப்போதாவது சாப்படிடுவதாயினும் நன்கு அறிமுகமான வியாபாரத் தளங்களில் மட்டும் இவ்வாறான உணவு வகையினை கொள்வனவு செய்வது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *