இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யட்ட புத்தளம் மாவட்ட காதி நீதிபதி..!
புத்தளம் மாவட்டத்தில் காதி நீதிபதியாக செயற்பட்டு வந்த காதியார் முஹம்மது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (23) கைது செய்யட்டார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இதனை உறுதிப்படுத்தினார்.
புத்தளத்தின் காதியார் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணாக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
குறித்த காதி நீதிமன்ற நீதிபதி முஹம்மது விசேட இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த மூன்று நாட்களாக கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக் குழு இவருக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காத்திருந்தது.
விவாகரத்து சான்றிதழ் பெறுவதற்காக சிலரை 22 ம் திகதி வருகை தருமாறு அறிவிக்கப்பட்டு அந்த தினத்தை மாற்றி 23 ம் திகதி வருகை தரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
22 ம் திகதியன்றும் சென்று திரும்பிய லஞ்ச ஊழல் ஆணை குழு 23ம் திகதி வருகை தரச் சொன்னதால் அந்த இடத்திற்கு சென்று அவரை 5000 ரூபா லஞ்சம் பெற்றமைக்காக கைது செய்துள்ளனர்.
காதியாரின் நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு பல்வேறு
முறைப்பாடுகள் தொடராக கிடைத்த வண்ணம் இருந்தன.
எனவே இவருக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் பல்வேறு முறைப்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காதியாருடைய காலம் நீடிக்கப்படாத நிலையில் இன்னும் ஒருவர் வரும் வரைக்கும் அதற்கான கோவைகளை சரி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்ற பொழுதிலே பல்வேறு விவாக விவாகரத்து தொடர்பான விடயங்களை இவர் முன்னெடுத்திருந்தார்.
இது தொடர்பான ஆதாரங்கள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணை குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட காதி நீதிவான் முஹம்மது புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 06 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(எம்.யூ.எம்.சனூன்)