பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர். சிட்சிபாஸை வீழ்த்தி சம்பியனானார் கெஸ்பர் ரூட்
புகழ்பெற்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் கிறீஸின் சிட்சிபாசை 7:5, 6:3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தை தனதாக்கினார் நோர்வேயின் கெஸ்பர் ரூட்.
விம்பில்டன், அவுஸ்திரேலிய ஓபன் ஆகிய உலகப் புகழ் பெற்ற தொடர்களுக்கு இணையான ஸ்பெய்னின் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 13ஆம் திகதி ஆரம்பித்து 21ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் என இரு பிரிவுகளாக போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில் சேர்பியாவின் டுசன் லொஜோவிக்கை போராடி வீழ்த்திய சிட்சிபாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவின் தோமஸ் மார்டினை எதிர்கொண்ட கெஸ்பர் ரூட் நேர் செட்களில் இலகு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான தனது வரவை உறுதிப் படுத்தினார்.
பின்னர் இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதி ஆட்டத்தில் கிறீஸ் வீரரான சிட்சிபாஸை எதிர்கொண்ட நேர்வேயின் கெஸ்பர் ரூட் முதல் செட்டை 7: என போராடி வெற்றி கொண்டு தன் ஆதிக்கத்தை முன்னிறுத்தினார். பின்னர் இடம்பெற்ற 2ஆவது செட்டில் முதல் செட் ஆட்டத்தை விட வேகத்தை அதிகப்படுத்தி விளையாடிய ரூட் 6:3 என மிக இலகுவாக தன் வசப்படுத்த இறுதிப் போட்டியில் 7:5, 6:3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற கெஸ்பர் ரூட் புகழ்பெற்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையரின் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தினார்.
(அரபாத் பஹர்தீன்)