உலகம்

இஸ்லாமிய அறிஞர் ஸின்தானியின் மறைவு இஸ்லாமிய உலகுக்கு பேரிழப்பு..!

இஸ்லாமிய அறிஞர் பேராசிரியர் அப்துல் மஜீத் ஸி(Z)ன்தானாயின் மரணம் இஸ்லாமிய உலகிற்கு பேரிழப்பாகும்.
பேராசியர் அப்துல் மஜீத் ஸின்தானி யெமன் நாட்டை சேர்ந்தவர் .எகிப்தின் பிரபல ஐனுஸ் சம்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் உயிரியல், இரசாயனவியல் துறையில் கற்ற பின்பு இஸ்லாமிய துறையில் ஆழமாக கற்றார்.
1962 ஆம் யெமனிற்கு திரும்பிய போது யெமன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நிறுவிய அவர் இஸ்லாஹ் கட்சியின் ஊடாக அரசியலில் நுழைந்து ஆட்சி முறையில் இஸ்லாமிய பெருமானங்களுக்காக மரணிக்கும் வரை போராடினார்.
அல் குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற அவரது நூல் மிகவும் பிரபல்யமானது.முளையவியல் (Embryology)
அல் குர்ஆனிய பார்வை சில மகப்பேறு விஞ்ஞானிகளின் சிந்தனைகளுடன் முரண்படுவதை அவதானித்த அவர் உலகில் உள்ள முக்கிய முளையவியல் விஞ்ஞானிகளுடன் மாநாடு நடத்தி அல் குர்ஆனின் பார்வை சரியானது என்பதை நிறுவினார்.
எய்ட்ஸ் நோய்க்கான அவரது சிகிச்சை முறை மிகவும் பிரபல்யமானது.ஆனால் அவரது வைரஸ் நோய் தொடர்பான ஆய்வுகள் .மேலத்தேய மருந்து முகவர்களுக்கு மிகவும் சவாலாக அமைவதனால் மூடி மறைக்க முற்பட்டனர்.ஆனால் அவர் பல எயிட்ஸ் நோயாளிகளை குணப்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அவரை சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்தது.ஓசாமா பின் லாடின்,ஈராக்கில் அமெரிக்க படைகளை எதிர்த்து போராடும் சுன்னி இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருக்கமான உறவு இருப்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அமெரிக்கா யெமன் மீது தாக்குதல் நடத்திய போது அவர் அமெரிக்க படைகளுக்கு எதிராக 2010 இல் ஜிஹாத் பிரகடனம் செய்தார் .
யெமனில் ஈமான் பல்கலைக்கழகத்தை நிறுவிய பேராசிரியர் அப்துல் மஜீத் .இறைவனின் இருப்பை விஞ்ஞான கண்னோட்டத்தில் நிறுவும் முறை அற்புதமானது .
நேற்று (2024.04.22) அவர் துருக்கியில் 82 வது வயதில் மரணமடைந்துள்ளார் .அவர் அறபு ,இஸ்லாமிய உலகின் விடுதலையை விரும்பிய ஒரு சுதந்திர அறிஞர் அல்லாஹ் அவரிற்கு உயரிய சுவனத்தை வழங்குவானாக .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *