மாலைதீவு பாராளுமன்றம் முகமது முயிசு வசம்
மாலைதீவு தேர்தலில் ஜனாதிபதி முகமது முயிசுவின கட்சி மிக அதிகமான ஆசனங்களைப் பெற்று மக்கள் ஆணையைப் பெற்றமையால் மாலைதீவு பாராளுமன்ற அதிகாரம் முயிசு வசமானது.
மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் முயிசுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியானது இதுவரையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதல் 86 இடங்களில் 66 இடங்களை வெற்றி கொண்டு மாலைதீவின் தேர்தல் அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஏற்கனவே 93 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் போதுமானதை விட அதிகமான ஆசனங்களை மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் மீட்கப்பட்ட நிலத்தில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது உட்பட, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்புடன் முன்னேற முயிசுவின் திட்டத்திற்கு இந்த வாக்களிப்பு ஒரு முக்கியமானதாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.