கட்டுரை

QR Code மயமாகியிருக்கும் வாழ்க்கை!

காலம்  வேகமாக பறக்கிறது.எம்மைச் சுற்றி இருந்த அனைத்தும்  Manual, Automatic, Electrical, Electronic, Digital, Computerized, Barcode,  QR Code, Satellite , GPS, Automation  என மாறி விட்டன. Bicycle ம் அதனது Lock ம் கூட பல வகையான கூர்ப்புகளுக்கு உள்ளாகின. தற்போது ‘QR Code lock’ உச்ச கட்டத்தில் இருக்கிறது!

கற்பது, தொழில் செய்வது, மார்க்கட்டில் மரக்கறி வாங்குவது, தேங்காய் மாங்காய் வாங்குவது ,  இறைச்சி மீன் முட்டை வாங்குவது, Pizza order பண்ணுவது, ஹோட்டலில் தேநீர் குடித்துவிட்டு bill கட்டுவது, Telephone Electricity water bill கட்டுவது, License புதுப்பிப்பது, Birth Certificate, Marriage certificate, Death certificateபெற்றுக்கொள்வது, OL / AL results பெற்றுக்கொள்வது, மலசலம் கழிக்க செல்வது ஆகிய வாழ்க்கையின் அனைத்து தினசரி விடயங்களும் QR Code மயமாகி விட்டன. Smart Phone ம் Internet ம் இல்லையென்றால் மலசலம் கழிக்கக் கூட முடியாத நிலை!

அந்தக் காலத்தில் ஊர்களில் எல்லா வீடுகளிலும் Bicycle இருக்க வில்லை. ஆனால் எல்லா Bicycle களிலும் Lock இருக்கும் அல்லது Bicycle ஐ மரத்திலோ அல்லது தூணிலோ பாதுகாப்புக்காக கட்டி வைப்பதற்கு  சங்கிலியும் பூட்டும் ஒவ்வொரு Bicycle உரிமையாளர்களிடம் கட்டாயம் இருக்கும். திருடர்களுக்கு மத்தியில் பைஸிக்கிள் திருடர்கள் என்று ஒரு உப குழு ஒன்று இருந்து கொண்டே இருந்தது. பைஸிக்கிள் லொக் மாறும் போதெல்லாம் அவர்களது தொழிலிலும் Upgrade கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது Job Market ஐ maintain பண்ணிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது இந்த GPS-Satellite monitored QR Code lock உடன் சவால் பண்ண முடியாது. எங்கிருந்தாலும் காட்டிக் கொடுத்து விடும். எனவே இவர்கள் வேறு தொழில்களை நாட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை.

இனி விடயதத்துக்கு வருவோம். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் “GPS-Satellite” மூலம் அவதானிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் “Electrical Scooters” பாவணைக்கு வந்து பல வருடங்கள் கடந்து விட்டன.

பொது இடங்களில் உள்ள  “Electrical Scooters” ஐ உபயோகிக்கும்  முறை ”

1-Mobile App ஐ Download பண்ண வேண்டியது
2-Wallet ஐ Top-up பண்ண வேண்டியது
3-QR Code ஐ Scan பண்ண வேண்டியது  (சாவி)
4-பயணத்தை ஆரம்பிப்பது
5-பயணத்தை  முடிப்பது

இவை பொது இடங்களில் பாவணைக்காக வைக்கப்பட்டிருக்கும். Instructions எல்லாம் App இலேயே இருக்கும். குறிப்பிட்ட பிரதேசத்தை தாண்டும் போது செயல் இழக்கும். இறுதியில் பயணித்த தூரம், நேரம், அதற்கான தொகை அனைத்தும் Automation system மூலம் அறியக் கிடைக்கும். இவற்றை கண்காணிப்பதற்கு மனிதர்கள் யாரும் அங்கில்லை என்பது தான் இந்த Automation. அனைத்தும் Software மூலமே நிகழ்கின்றன! கள்வர்களுக்கு இவற்றை பார்க்க முடியும். தூக்கினால் case பாரம்.  Satellite ம் Police ம் வீட்டுக்கே வந்திடும்.

QR Code, Camera, Satellite, Social Media கள்வர்களுக்கும். ஏமாற்றுக் காரர்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டிருக்கிறது! இறைவனுக்கு பயமோ இல்லையோ, இவற்றுக்கு பயந்து களவு ,பொய், ஏமாற்று  செய்ய முடியாத நிலையில் மனிதன் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தொழிநுட்பம் மனிதனுக்கு சாதகமாக அமையட்டும்.

 

(ஹரீஸ் ஸாலிஹ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *