உள்நாடு

சதொச ஊடாக இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அண்மையில் தீர்மானித்துள்ளது.

வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில் 2000 மெற்றிக் தொன் வெங்காயம் முதல் கையிருப்பாக இறக்குமதி செய்யப்படும் என சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அண்மையில் தீர்மானித்துள்ளது.

வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில் 2000 மெற்றிக் தொன் வெங்காயம் முதல் கையிருப்பாக இறக்குமதி செய்யப்படும் என சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *