இவனின் பிரிவில் ஒரு துளியேனும் என் விழி அழுதிடாது விட்டால் – எஸ். ஜனூஸின் கவிதை
இவனின் பிரிவில்
ஒரு துளியேனும் என் விழி அழுதிடாது விட்டால்
இந்த இரவின் இருட்டில்
நான் தொலைந்து போவேன்..
பல நேரங்களில்
அரசியல்வாதிகளின் மரணத்தில்
மக்களின் கண்ணீர் ஆறாக ஒடுவதில்லை..
ஆயினும் பாலித எனும்
அரசியல் தேவனின் பெருமையானவன்
ஆறாக ஓடும் மானிட நேய ஊற்றில்
அரசியலை உரசினான்..
பக்கத்து வீட்டில் பரவசமாய் பழகிய
ஒரு குறும்பு மிகு
அழகு பாலகன் இறந்தது போல
பாலித ஐயாவின் மரணம்
மனிதத்தை கொண்டாடும் மனதுகளில்
மாபெரும் துயரை அப்பி இருக்கிறது..
நல்ல மனிதர்களின்
எண்ணிக்கை குறைகிறது
இந்த இரவும் நெடும் துயரில் அழுகிறது..
எஸ்.ஜனூஸ்