உள்நாடு

ஹம்பாந்தோட்டை ஸாஹிராவுக்கு திறன் வகுப்பறையை வழங்கிய சஜித் பிரேமதாச..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 156 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 15 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார். மேலும், தெரண தொலைக்காட்சி லிட்டில் ஸ்டார் போட்டியில் தேசிய மட்டத்தில் 4 ஆவது இடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு மடிக்கணினி ஒன்றையும் வழங்கி வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *